திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலையை நியமித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக சட்டதிட்ட விதிகளின்படி துணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தின் பெயரை அடைமொழியாகக் கொண்ட கலை, பல வருடங்களாக இளைஞரணியின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர் என்பதுடன், திமுக தலைவர் ஸ்டாலினின் பயணத்திட்டங்களை திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, திமுகவில் துணை அமைப்புச்செயலாளர் பொறுப்பு இல்லாமல் இருந்த நிலையில், அந்த பொறுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.