பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 6ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கான, தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரை பணயவைத்தைச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரையாவார்கள் அனைவரையும் சமீபத்தில் முன் களப்பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், பத்திரிகைத்துறை…

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 6ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கான, தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரை பணயவைத்தைச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரையாவார்கள் அனைவரையும் சமீபத்தில் முன் களப்பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், பத்திரிகைத்துறை மற்றும் அனைத்து ஊடகத் துறையினர் பாதுகாப்பாக நோய்த் தொற்றுக் காலத்தில், தங்கள் பணியினை மேற்கொள்ள ஏதுவாக பத்திரிகையாளர்களுக்குத் தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிடப்பட்ட அறிக்கையில்,  செய்தித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து வரும் 6ஆம் சென்னை கலைவாணர் அரங்கில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் முகமானது காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 5,048 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.