நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுவரை 3,05,45,433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 52,299 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், மொத்தமாக 2,96,58,078 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், தற்போது 4,85,350 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 955 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், இதுவரையிலான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 63,87,849 தடுப்பூசிகளும், இதுவரை மொத்தம் 35,12,21,306 தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 18,38,490 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில், 41,82,54,953 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.







