முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

விசிகவின் 30 ஆண்டுகால அரசியல்: திருமாவளவன் பெருமிதம்!

தமிழகத்தில் 30 ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடித்து இருப்பதே இமாலய சாதனை என திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற தேர்தல் வெற்றி விழாவில், கட்சி தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன், பல்வேறு நெருக்கடிகளை கடந்து, 30 ஆண்டுகளாக அரசியலில் தாக்குப்பிடித்திருப்பதே இமாலய சாதனை என கூறினார்.

மக்களோடு இணைந்து பயணிக்கிற அரசியல் தான் கட்சிக்கு நல்லது என்று கூறிய அவர் இனி தேர்தல்களை புறக்கணிக்காமல், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடு வேண்டும் என தெரிவித்தார். விசிகவின் அரசியல் பயணம் நீண்ட கால பயணம் என்பதால்தான், சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச்சின்னத்தில் நின்று தனித்தன்மை காக்க நினைத்ததாக குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

Halley karthi

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் வாபஸ்: முதல்வர்

Niruban Chakkaaravarthi

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி.. திருக்குறுங்குடி கோயிலை திறக்க வனத்துறை அனுமதி

Halley karthi