புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பதவியேற்பு!

புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நாளை பிற்பகலில் பதவியேற்கவுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் துணை நிலை…

புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நாளை பிற்பகலில் பதவியேற்கவுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் துணை நிலை ஆளுநரை சந்தித்தனர்.


அப்போது சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ரங்கசாமி வழங்கினார். இதை ஏற்றுக்கொண்ட துணைநிலை ஆளுநரை ஆட்சி அமைக்க வருமாரு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.


இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நாளை பிற்பகல் ஒரு மணிக்கு பதவியேற்கவுள்ளார். இதற்கான பதவியேற்புவிழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் எளிமையான முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.