சூரப்பா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் நோட்டீஸ்!

“உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது” என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இருந்த போது அவர் மீது…

“உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது” என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இருந்த போது அவர் மீது முறைகேடு புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்ய, தமிழக அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், பல்கலைக்கழக ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்றது. இதனிடையே, துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிகாலம் நிறைவடைந்தது. எனினும் அவர் மீதான விசாரணை இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாகவும் விரைவில் அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் எனவும் நீதிபதி கலையரசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், ‘உங்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த உரிய விளக்கத்தை விசாரணை ஆணையத்துக்கு தெரிவிக்குமாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.