தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், நாகப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷநவாஸ் காலை 11.40 நிலவரப்படி முன்னிலையில் உள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இந்நிலையில் காலை 11.40 மணியளவில் திமுக சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளரான தங்க. கதிரவன் குறைந்த வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.







