தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு கொண்ட ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,“கொரோனா பரவல் குறைந்தாலும் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடர அரசு உத்தரவிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தளர்வுகள் குறைக்கப்பட்டாலும் இனிமேல்தான் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும்.
கோவிட் கட்டளை மையத்தில் தற்பொழுது தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இறப்பை மறைப்பதாக சொல்கிறார்கள் அப்படி எதுவும் நடைபெறவில்லை. கொரோனா இறப்புகளை மறைத்து விட்டதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு.

மருத்துவமனைகளில் வழங்கும் இறப்பு தொடர்பான சான்றிதழ்களில் கொரோனா காரணமாக இறந்தார்களாக, அல்லது கொரோனா குணமடைந்த பின்னர் ஏற்படும் பாதிப்பு காரணமாக இறந்தாரா என்று குறிப்பிடப்படும். அவ்வாறு வழங்கும் சான்றிதழ்களில் எதாவது மாறுபாடுகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம் என்றார்.
மேலும் தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பில் பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா பிளஸ் கொரோனா தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கண்டறியப்பட்டது. மாதத்தில் இரு முறை இந்த டெல்டா பிளஸ் வைரசின் பழக்கம். ஒரு சில மாவட்டங்களில் 5% பாதிப்பு உள்ளது ஏனைய மாவட்டங்களில் 3%குறைவாக்ல் உள்ளது. தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணி நடைபெற்று வருகிறதுஎன சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.