முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்: உயர் நீதிமன்றம்

மாநிலத்தில் அனைத்து பிரிவினருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மாநில அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சிறந்த மருத்துவ வசதிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்களில் தரம் குறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி, முத்துக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் சிறந்த மருத்துவ வசதிகள் இருந்த போதும், கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை அபாயகரமானதாக உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையை தடுக்க தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் மோசமான நிலை தவிர்க்கப்பட்டதாகவும், இருப்பினும் இதுசம்பந்தமாக தெளிவான கொள்கையை தெரிவிக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தது.

மாநிலத்தில் அனைத்து பிரிவினருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சிறந்த மருத்துவ வசதிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 30 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Advertisement:
SHARE

Related posts

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை

Vandhana

மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

Halley karthi

பிரபல இந்தி இயக்குநருடன் இணைகிறார் துல்கர் சல்மான்!

Halley karthi