முக்கியச் செய்திகள் கொரோனா

காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ரூ.58.59 கோடி ஒதுக்கீடு

காவல்துறையில் கொரோனா முன்களப் பணியாற்றியவர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.58.59 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.6.2021) ரூ.58.59 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறை பணியாளர்கள், தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை பெறுவார்கள்.

Advertisement:
SHARE

Related posts

பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது : தமிழக அரசு!

Ezhilarasan

ஆக்சிஜன் படுக்கை வசதியை தேடி செல்லவேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு

Saravana Kumar