#Amaran படத்திற்கு TN CAPF WARA கண்டனம் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரிக்கை!

அமரன் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்குமாறு பட குழுவினருக்கு தமிழ்நாடு முன்னாள் CRPF நலன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர்…

amaran, crpf

அமரன் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்குமாறு பட குழுவினருக்கு தமிழ்நாடு முன்னாள் CRPF நலன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  ‘அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்நிலையில், அமரன் படத்திற்கும், படக் குழுவினருக்கும் தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதம் ஏந்திய போலீஸ் படை நலன் மற்றும் மறுவாழ்வு சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்ட இந்த சங்கம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

” ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிகளை பார்த்து CRPF வீரர்கள் வேதனை, அதிர்ச்சியும், ஆவேசம் ஆகியவற்றால் மூழ்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரியை கொலை செய்ய நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் வழங்காமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது மிகவும் இழிவானதாக இருக்கிறது.

CRPF வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கடும் அளவில் அவமதிப்பதாகவும், அவர்களின் புகழ்மிக்க பணிகளை மரியாதை இன்றி சிதைக்கின்றதாகவும் உணர்த்துகிறது. படைப்பு, சுதந்திரம் என்ற பெயரில் கற்பனை கொண்டு உருவாக்கி எம்மீது இழிவு கூறும் ஒரு காட்சியை உருவாக்கி மண்ணின் மைந்தர்கள், நாங்கள் ரத்தத்தை சிந்தி நாட்டை காக்கும் போது அதை கேலியாக படம் பிடிப்பது நியாயமா? நம் 44 ஆர்ஆர் வீரர்கள் சண்டையிட்டு வீர மரணம் அடைவதை காட்டி அதே நேரத்தில் CRPF வீரர்கள் எந்த எதிர்ப்புமின்றி கொல்லப்படுவதாக காட்டுவது அவர்கள் தியாகத்தை முற்றிலும் கௌரவிக்காமல் கொச்சைப்படுத்துவது மட்டுமே உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள் : ChennaiGrandMasters2024 | சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் இன்று தொடக்கம்!

நாட்டின் பல்வேறு மூளைகளில் இருந்து எந்த பாதுகாப்பும், சலுகைகள் இன்றி போராடி உயிர் தியாகம் செய்த எண்ணற்ற CRPF வீரர்களின் தியாகத்தை இந்த ஒரு காட்சி முற்றிலுமாக அழிக்கக் கூடியதாக உள்ளது. இந்த படத்தில் இச்செயலில் பொதுமக்களின் மனதில் CRPF வீரர்களின் மதிப்பை சிதைக்கும் வகையில் உள்ளதால் TN CAPF WARA அமைப்பு தனது கடும் கண்டனத்தை ‘அமரன்’ படக் குழுவிற்கு தெரிவிக்கிறது. எங்கள் வீரர்களின் தியாகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.