செய்திகள்

திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்

திருச்சி திருவெறும்பூர் கூத்தைபாரில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 15பேர் காயமடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்
தமிழகம் முழுவதும் களைக்கட்டும்.அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மட்டும்
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக 26 ஊர்களில் முறைப்படி மாவட்ட
நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு மாட்டு
பொங்கல் அன்று 16ம்தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது – இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு
இடங்களில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி
நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி திருவெறும்பூரை அடுத்த கூத்தைப்பாரில் ஜல்லிகட்டு
போட்டு இன்று காலை 8 மணி அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது – இந்த
ஜல்லிக்கட்டு போட்டியினை காலை ஆர்.டி.ஓ தவச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வாடிவாசல் வழியாக திமிறிய காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள்
ஆர்வத்துடன் அலை மோதினர். கூத்தைபார் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி
மாவட்டம் மட்டுமல்லாது கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை,
திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகளும், 316 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

அதேப்போல் ஜல்லிக்கட்டு போட்டு இறுதியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு,
முதல் பரிசாக குளிர்சாதன பெட்டி, இரண்டாம் பரிசாக வாஷிங் மெசின் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கும் வீரருக்கு மிதிவண்டியும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுவரை 5 சுற்றுகள்  நிறைவடைந்துள்ளன.  500 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.

நண்பகல் நிலவரப்படி 6 மாடுபிடி வீரர்கள், 3 உரிமையாளர்கள், 5 பார்வையாளர் மற்றும் விழா கமிட்டியைச் சார்ந்த ஒருவர் என மொத்தம் 15 காயமடைந்துள்ளனர். இதில் காட்டூரை சேர்ந்த மாடுபிடி வீரர் சூர்யா  என்பவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 750 காளைகள் தயாராக இருந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 150 காளைகள் என  மொத்தம் 900 காளைகள் அவிழ்க்கப்படுவதாக விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீர்ப்புக்கு பின் அதிமுகவில் தற்போதைய நிலை என்ன?…யாருக்கு என்ன அதிகாரம்?…

Web Editor

சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட நாய்கள் காரணமா?

Vandhana

அரசின் பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள்- மேலூரிலிருந்து ஏற்றுமதி

Yuthi