ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்கு கிடைக்கும்- ஜெயக்குமார் தாக்கு

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்கு கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற…

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்கு கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய  முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கூறியதாவது..

”திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை மக்களுக்கு எடுத்து சொல்லி திமுக விற்கு எதிராக மிக பெரிய வெற்றியை அதிமுக பெரும். 2024 தேர்தல் மற்றும் 2026 தேர்தல்களில்  திமுக பூஜ்ஜியம் என மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமையும்.

எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக கொண்டு சீரும் சிறப்புமாக
அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தாம் தான் அதிமுக என ஓபிஎஸ்
எவ்வாறு சொல்ல முடியும் அவ்வாறு சொல்வது சட்டரீதியாக தவறு. ஏ பார்ம் பி பார்மில் கையெழுத்தும் போடும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் உள்ளது.

அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் அதன் மூலம் அதிமுகவுக்கு தொந்தரவு அளிக்க
வேண்டும் என்கிற வகையில் திமுகவின் பி டீமாக ஒபிஎஸ் செயல்படுவதாக அதிமுக
தொண்டர்கள் பார்கிறார்கள். ஒபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் அவரை மக்கள் சுயேட்சையாக தான் கருதுவார்கள் இந்த தேர்தலில் நோட்டா வுக்கும் கீழே ஒபிஎஸ் சென்று விடுவார்.” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.