கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி…

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்வில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெருமாநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு  கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருக்கோவில்.மிகவும் புகழ்பெற்ற இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான பங்குனி மாத பவுர்ணமியில் நடைபெறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும்.அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலாமாக துவங்கியது.
சுமார் ஒருவார காலமாக நடைபெற்று வரும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை 4 மணி அளவில் தொடங்கியது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி,பராசக்தி கோஷங்கள் முழங்க குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.குண்டத்தில்
இறங்குவதற்காக திருப்பூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.

கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.குண்டத்தில் இறங்குவோரின் பாதுகாப்பு கருதி ஏராளமான தீயணைப்பு வீரர்கள் குண்டத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.