கும்பகோணத்தில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் வசிக்கும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீர் சிலையுடன் நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தியின் 2621-வது பிறந்தநாளை சமண சமயத்தாரால்…

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் வசிக்கும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீர் சிலையுடன் நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தியின் 2621-வது பிறந்தநாளை சமண சமயத்தாரால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கும்பகோணம் விஜேந்திர சுவாமி தெருவிலுள்ள ஜெயின் கோயிலிருந்து மகாவீர் சிலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விஜயேந்திர சுவாமி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

–அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.