திருப்பூர் குமரன் மணிமண்டபம் – பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தகவல்!

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், “சென்னிமலையில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை தியாகம் செய்த திருப்பர் குமரனின் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அறிவித்திருந்தார். அந்த மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சுவாமிநாதன், “திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் சென்னிமலையிலிருந்து தூரமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சென்னிமலை பகுதியில் வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்து சமய அறநிலையத்துறையிடம் இடம் கோரிய நிலையில் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.