தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தான் புதிய சக்தியை பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக விமான முனையத்தை பார்வையிட்டு, அங்குள்ள சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.







