மயிலாடுதுறையில், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தினர் இணைந்து பாராயணம் செய்தனர்.
தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
கோயிலில் மே 24-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இயற்றிய “ஓருருவாயினை” என தொடங்கும் தேவாரப் திருப்பதிகத்தினை ஒரு கோடி முறை ஓதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், அத்திட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கடந்த12-ஆம் தேதி திருக்குவளையில் தொடக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஆதீன கிளை மடங்கள், ஆதீன கல்வி நிலையங்களில் இப்பதிகம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் அனைத்து மதத்தினர் இணைந்து ‘ஓருருவாயினை” தேவாரப்பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் பதிகத்தைப் பராயணம் செய்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். இதில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர்.
-எம்.ஸ்ரீ மரகதம்