மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
தாம்பரத்தில் 5வது மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 500க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் வெற்றிபெற்ற வீரர்களுக்குக் கோப்பைகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சென்னை அடுத்த தாம்பரம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் ஜி.எம்.செஸ் அகடமி சார்பில் 5 வது மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக செயலாளர் பூவனாசாய், செம்பாக்கம்
வீரா சாமி, ஆனந்த், இந்நிகழ்ச்சி மாவட்ட துணை செயலாளர் மாசிலாமணி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிகவும் உற்சாகமாகத் தொடங்கப்பட்ட இந்த சதுரங்க போட்டியில் 8 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தாம்பரம் மாநகராட்சி 39 வது வார்டு
மாமன்ற உறுப்பினர் கிரிஜா சந்திரன் வெற்றிபெற்ற வீரர்களுக்குக் கோப்பைகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
-எம்.ஸ்ரீ மரகதம்







