திசையன்விளை ஆதிமுத்தாரம்மன் கோயில் திருவிழா – திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்!!

திசையன்விளை ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி கோயில் கொடைவிழாவின் சிறப்பம்சமாக விரைவில் திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆலந்தேரி ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி திருக்கோயில் கொடைவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

திசையன்விளை ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி கோயில் கொடைவிழாவின் சிறப்பம்சமாக விரைவில் திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆலந்தேரி ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி திருக்கோயில் கொடைவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இக்கோயில் திருவிழாவில் திருமணமாகாத ஆண்கள், சிறுவர்கள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

இதற்காக கோயில் திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பாக ஆண்கள் கடுமையாக விரதமிருந்து தங்கள் கைகளால் மாவு பிசைந்து விளக்கு செய்து தீபமேற்றி கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

திருவிழாவினை காண சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். ஐயா கோயில் திருவிழாவும், அம்மன் கோயில் திருவிழாவும் ஒரு சேர நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.