போதிய இடமின்றி திணறும் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத வகுப்பறைகள்!

திருநெல்வேலி மாநகராட்சியின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிட்டதட்ட 4500க்கும் அதிகமான மாணவிகள் பயின்றும் போதிய இடவசதி இல்லாததால் மாணவிகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை தென்னகத்து ஆக்ஸ்போர்டு…

திருநெல்வேலி மாநகராட்சியின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிட்டதட்ட 4500க்கும் அதிகமான மாணவிகள் பயின்றும் போதிய இடவசதி இல்லாததால் மாணவிகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை தென்னகத்து ஆக்ஸ்போர்டு என்று பலரால் அழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு இங்கு பள்ளிகளும்,கல்லூரிகளும் உள்ளன.மேலும்
இங்கு டவுனில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பாரம்பரியமிக்க பள்ளிகளில் ஒன்றாகும். இப்பள்ளிக்கென திருநெல்வேலி சுற்றுவட்டாரத் தில் தனி மதிப்பு இருக்கிறது.இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கிட்டதட்ட 4500 மாணவிகள் பயின்று வருகின்றனர்.இத்தகைய சிறப்புடைய இந்த பள்ளி தற்போது போதிய இட வசதியின்றி திணறி வருகிறது.

இதனால் பள்ளி காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ளதால் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. என்னதான் புகழ்பெற்ற பள்ளியாக இருந்தாலும் பள்ளியின் போதிய இடவசதியின்மை தற்போது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

மாணவிகளின் இடவசதிக்கென கட்டடம் கட்டுவதற்கு இடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் கட்டடம் கட்டப்படாமல் இருப்பது ஒருபுறம் என்றால் மறுபுறம் பள்ளி கட்டிடத்தின் ஒருபகுதி மருத்துவமனையாக செயல்படுவது
மேலும் வேதனைக்குரிய விஷயமாகும்.தற்போது பூதாகரமாக வெடித்துள்ள இவ்விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறுகையில் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறைகள் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.இருப்பினும் எவ்வளோ வேகமாக முடியுமோ அத்தனை விரைவில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள்
அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.