பிரபல ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் கென்னடி திரைப்படத்திற்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ கடந்த வாரம் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படும். இந்த முறை இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படுகின்றன. அதன்படி அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படுகின்றன.
இந்த நிலையில் கென்னடி பட திரையிடலில் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் ராகுல் பட் ஆகியோருடன் பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில் அழகான உடையில் வந்த சன்னி லியோனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் ராகுல் பட் ஆகியோர் வந்தனர். சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான பதிவை வெளியிட்டார்.
தனது வாழ்க்கையின் பெருமைமிக்க தருணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி இருந்ததாக கென்னடி பட இயக்குநர் மற்றும் சக நடிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்த பதிவு அமைந்தது.