களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நாளஐ துவங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட களக்காட்டில் தமிழக வனத்துறையின் கட்டுபாட்டின் கீழ் புலிகள்…

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நாளஐ துவங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட களக்காட்டில் தமிழக வனத்துறையின் கட்டுபாட்டின் கீழ் புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.இப்புலிகள்
காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் புலிகள் மட்டுமின்றி யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.மேலும்
அரியவகை உயிரினங்களான செந்நாய்,சிங்கவால் குரங்கு உள்ளிட்டவைகளும் உள்ளன.இவ்விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பாக நடைபெறுவது வழக்கமாகும்.இப்பணிகளில் வனத்துறை அதிகாரிகள்,  தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபடுவர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற மே17ல் தொடங்கி 19ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.களக்காடு வனசரகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி,கோதயாறு உள்ளிட்ட 32 இடங்களில் செல்போன் ஆப் மூலமாக இப்பணியானது நடைபெற உள்ளது.யானைகளை நேரில் காண்பது,அவற்றின் எச்சங்களை சேகரித்தல்,நீர்நிலைகளை சார்ந்து செல்லுதல் உள்ளிட்ட மூன்று விதமாக முறைகளில்
யானைகளை கணக்கெடுக்கின்றனர்.

இதற்கான அறிமுக பயிற்சி வகுப்பு களக்காடு தலையணையில் நடைபெற்றது. புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ரமேஷ்வரன் கலந்து கொண்டு பயிற்சியை
தொடங்கி வைத்தார்.கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னரே களக்காடு வனப்பகுதியில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.