திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலையின் நடுவே இடையூறாக இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில் கடந்த நிதியாண்டின் கீழ் கண்ணநல்லூர் டி.டி.டி.ஏ பள்ளி தெருவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வண்ண கற்கள் பதித்த சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதற்காக சுமார் 11.60 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் புதியதாக போடபட்ட சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை அகற்றாமல்
அப்படியே சாலையானது போடப்பட்டுள்ளது.
இதனால் இந்த சாலையின் வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.எனவே அரசு இதில் தலையீட்டு மின்கம்பத்தை அகற்றி புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— வேந்தன்







