கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒரு பகுதியாக திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் நகரில் தேவாரப் பாடல் பதிகம் பெற்ற தலங்களில் ஒன்றான நாகேஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இத்தேரோட்டத்தின் போது திருத்தேரில் நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன், ஆகியோர் எழுந்தருளினர்.
கும்பகோணம் துணை மேயர் தமிழ் மற்றும் சமூக ஆர்வலர்கள் சௌந்தரராஜன், சத்திய நாராயணன், பாலகிருஷ்ணன், சேகர் உள்ளிட்டோர் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, பக்தர்கள் நாகேஸ்வரா நாகேஸ்வரா என கோசமிட்டவாரே தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
—-சௌம்யா.மோ






