கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக, ஆட்சியைக் கைப்ற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி மற்றும் தினை பொருட்கள் வழங்கப்படும்.
- மேலும் நாள்தோறும் 1/2 லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும்.
- மலிவு விலையில் உணவு வழங்க ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா என்ற பெயரில் உணவகங்கள் அமைக்கப்படும்.
-
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.
- கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
-
ஒவ்வொரு தாலுகாவிலும் ஏழை நோயாளிகள் பயன்படும் வகையில் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்படும்.
-
மாநிலம் முழுவதும் 10 லட்சம் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
-
விஸ்வேஸ்வரய்யா வித்யா திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
-
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவது முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
-
முதியோர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
-
ரூ.1500 கோடியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தப்படும்.
-
விவசாயத்தை மேம்படுத்த ரூ.30,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
-
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-
ரூ.1000 கோடி செலவில் புராதண கோயில்கள் புணரமைக்கப்படும்.
-
கர்நாடகாவை 1 டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-
தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு புதிதாக உருவாக்கப்படும்.








