’மூன் வாக்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான்…!

பிரபு தேவா நடிக்கும் புதிய திரைப்படமான ‘மூன் வாக்’ படம் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகராகவும் அறிமுகமாகிறார்.

நடன இயக்குநர் மற்றும் நடிகரான பிரபு தேவா நடிக்கும் புதிய திரைப்படம் ‘மூன் வாக்’. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் இப்படம் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.  முழுநீள நகைச்சுவை படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் 5 பாடல்களுக்கு இசையமைத்து அவரே பாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி , இப்படத்தின் மூலம் ஏ.ஆர். ரகுமான் நடிகராகவும் அறிமுகமாகிறார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகியுள்ளது. “ஒரு கோபமான திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் ஏ.ஆர். ரகுமான் தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன்,  ஸ்வாமிநாதன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இத்திரைப்படம் 2026 மே மாதத்தில் வெளியாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.