திருச்செந்தூர்; தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் போராட்டம்

திருசெந்தூர் அமலி நகர் கடற்கரை கிராமத்தில் தூண்டில்வளைவு அமைக்க வேண்டும் என கோரி மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் அரசு அறிவித்த தூண்டில் வளைவு…

திருசெந்தூர் அமலி நகர் கடற்கரை கிராமத்தில் தூண்டில்வளைவு அமைக்க வேண்டும் என கோரி மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் அரசு அறிவித்த தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படகுகளில் கருப்புக்கொடி கட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்கவும்: “நம் தாய்மொழியை கண்ணின் இமைப்போல காப்போம்” – எடப்பாடி பழனிசாமி

தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி 2வது நாளாக மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். டற்கரையில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்புக்கொடியுடன் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் இதனால் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து
கடற்கரை கிராமத்தில் மீனவர்களுடன் நியூஸ் 7 தமிழ் களம் இறங்கி மீனவர்களின் பிரச்சனைகளை விரிவாக பதிவு செய்தது.

அப்போது பேசிய மீனவர்கள், 2022 -23ம் ஆண்டு சட்டப்பேரவையில் ரூ.83 கோடி மதிப்பில் தூண்டில் பாலம் அமைக்க அறிவிப்பு வெளியானது. மீன்வளத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். கடலில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததால் படகுகள் சேதமடைகிறது. எனவே அரசு விரைந்து தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.