முக்கியச் செய்திகள் சினிமா Instagram News

தங்கலான் படத்தில் இணைந்த இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன்

தங்கலான்  படத்தில் இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தங்கலான் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகும்.
விக்ரமின் கோப்ரா மற்றும் ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது இந்த இந்த இரு படங்களும் பெறும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் தங்கலான் படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். 90 கால கட்டத்தில் கேஜிஎஃப் இல் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் என ரஞ்சித் தெறிவித்துள்ளார்.
சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதல்  முறையாகச் விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில்  தொடங்கியது. பா.ரஞ்சித் தனது
வழக்கமான கதைக்களத்தில் இப்படத்தை இயக்கி வருகிறார். தங்கலான் என்றால் ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பற்றிதான் இதிலும் சொல்லப்படுகிறது என்று இதன் டீசர் வீடியோவிலேயே தெரிந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கண்டங்களைத் தாண்டி மலர்ந்த காதல்

G SaravanaKumar

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

EZHILARASAN D

இறந்த பிறகு நம்முடைய சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?

Arivazhagan Chinnasamy