“நம் தாய்மொழியை கண்ணின் இமைப்போல காப்போம்” – எடப்பாடி பழனிசாமி

நம் தாய்மொழியை கண்ணின் இமைப்போல காப்போம் என சர்வதேச தாய்மொழி தினத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக…

நம் தாய்மொழியை கண்ணின் இமைப்போல காப்போம் என சர்வதேச தாய்மொழி தினத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிக்கவும்: ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும்- அண்ணாமலை

பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பில் நடைபெற்ற, பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாய்மொழி தினத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! என மொழி உணர்வால் இணைந்து,மக்கள் வாழ்வு செழிக்க, நம் தாய்மொழியை கண்ணின் இமை போல காப்போம்! உலகதாய்மொழி தினம் வாழ்த்துக்கள்’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.