மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் – சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வர அரசு திட்டம்

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று அரசு தரப்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவையில் இன்று காலை நீதி நிர்வாகம் மற்றும்…

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று அரசு தரப்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டப்பேரவையில் இன்று காலை நீதி நிர்வாகம் மற்றும் சட்டத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் அரசு தரப்பில் ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஹைதரபாத்திடம் பணிந்தது பஞ்சாப் – 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி 

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு மத்திய அரசு
அறிவுரை வழங்கவும், இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளதாகவும், பின்னர்,
தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.