கமலுடன் மோதும் அஜித்? ஒரே நாளில் வெளியாகும் #ThugLife #Vidaamuyarchi !

தக் லைஃப் மற்றும் விடாமுயற்சி திரைப்படங்களின் வெளியீடு குறித்து தகவல் கசிந்துள்ளது. நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அஜித் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு…

தக் லைஃப் மற்றும் விடாமுயற்சி திரைப்படங்களின் வெளியீடு குறித்து தகவல் கசிந்துள்ளது.

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அஜித் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் என அறிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடாமுயற்சி படமே முடிவடையாமல் இருப்பதால், பொங்கலுக்கு விடாமுயற்சியை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

அதேநேரம், நடிகர் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், 2025 பொங்கல் வெளியீடாக தக் லைஃப் திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதெல்லாம் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில், விடாமுயற்சியும், தக் லைஃப் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.