கரூர்: புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகம் -ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் மாவட்டம் , வேலாயுதம் பாளையத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் புகழ்பெற்ற புகழிமலை என்று அழைக்கக் கூடிய…

கரூர் மாவட்டம் , வேலாயுதம் பாளையத்தில் புகழ்பெற்ற முருகன்
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  ஆயிரக் கணக்கான
பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் புகழ்பெற்ற புகழிமலை என்று
அழைக்கக் கூடிய ஆறு நாட்டார் மலை உள்ளது. இம்மலையின் உச்சியில்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த
கோவில் குடமுழுக்கு வருகின்ற 27ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு , இன்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும்
நிகழ்வு நடைபெற்றது.

காவிரி ஆற்றில், தவுட்டுப்பாளையம் துறையிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பக்தர்கள் தலையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்தனர். இவர்கள்,
தவிட்டுப்பாளையம், கரூர் – சேலம் புறவழிச்சாலை, பாலதுறை மற்றும்
வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வழியாக மேள தாளங்கள் முழங்க யானை,
குதிரை, ஒட்டகம் மற்றம் சாமி வேடம் அணிந்த பெண்கள் நடனத்தோடு
ஊர்வலமாக வந்தனர்.

இதனை தொடர்ந்து, மலையின் முன்புறம் பக்தர்களை வரிசையாக அனுப்பி
தீர்த்ததை சேமித்து கொண்டனர். மேலும், இந்த விழாவினை சாலையின்
இரு புறங்களிலும் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.