வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்; பொதுமக்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வத்திராயிருப்பு…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு.

விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வத்திராயிருப்பு பகுதி தனி தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா மாற்றுதல், ஓய்வூதியத் தொகை, முதியோர் உதவித்தொகை, பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தையே நாடி வருகின்றனர்.

இந்த நிலையில் , கடந்த சில தினங்களாகவே வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. முதியோர் உதவித் தொகைக்கு முதியோர்களிடம் சுமார் 3000 முதல் 5000 வரை பெற்றுக் கொண்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு 2000 ரூபாய் லஞ்சம் கொடுத்து , முதியோர் உதவித்தொகை பெற வழிவகை செய்கின்றனர்.

மேலும், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கும் இடைத்தரகர்கள் பணம் கொடுத்து அந்த பணியை வெகு விரைவில் முடிகின்றன. ஆனால் , சாதாரண மக்கள் கோரிக்கையை கேட்க சென்றால், எந்தவித கோரிக்கையும் அதிகாரிகள் நிறைவேற்றுவது இல்லை எனவும், உடனே மாவட்ட ஆட்சியர் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.