தனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாகக் கூறி பாஜக கவுன்சிலர் மானாமதுரை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர அலுவல் ஆய்வுக் கூட்டம் நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் துவங்கும் போதே வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு கையில் பதாகைகளுடன் வந்த 10 வது வார்டு கவுன்சிலர் பாஜகவை சேர்ந்த முனியசாமி மன்றத்தின் தரையில் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கவுன்சிலர் முனியசாமி கூறுகையில் கடந்த ஓராண்டு காலமாக
தனது வார்டு பகுதில் எவ்வித நலத்திட்ட பணிகளும் நடைபெறவில்லை,எதிர்கட்சி உறுப்பினரின் வார்டு என்பதால் தனது வார்டு முழுமையாக புறக்கணிக்கப்படுவதாக கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.அவரிடம் பேசிய நகராட்சி தலைவர் மாரியப்பன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் 10 வது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து கவுன்சிலர் முனியசாமி தனது போராட்டத்தை கைவிட்டு சென்றார்.தொடந்து மன்ற கூட்டம் நடைப்பெற்றது.
-வேந்தன்







