சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூக்குழி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயிலில் 69-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பூக்குழி வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்ததையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி வைபவம் நடைபெற்றது. முன்னதாக, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி பராசக்தி என்ற முழக்கத்துடன் அம்மனை வழிபட்டனர்.
இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
—-சௌம்யா.மோ








