முக்கியச் செய்திகள் தமிழகம்

மத வெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்க நினைப்பவர்கள் பாஜகவினர் -அமைச்சர் பொன்முடி

மத வெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்கலாம் என்று நினைப்பவர்கள்
பாஜகவினர் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். 

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 195வது மாமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் தலைமையில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் 2000 ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஓஎம்ஆர் சாலை மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வரலாற்றை திரித்து திருத்தி சொல்லி வருகிறார்கள். தமிழகத்தை அவர்கள் மாற்றி அமைக்கிறார்கள். அங்கே சென்றால் இந்தி என்று சொல்கிறார்கள். இங்கே வந்தால் தமிழ் என்று நிதி அமைச்சர் சொல்லி வருகிறார்கள் என்றார்.


மேலும், இதை எல்லாம் மாற்றி அமைத்து திராவிட உணர்வை, தமிழ் உணர்வை, இன உணர்வை, சமூக நீதி கருத்துக்களை இந்த மண்ணில் விதைத்தது தந்தை பெரியார் அண்ணா கலைஞர் மற்றும் பேராசிரியர் அவர்கள். மகளிர்கள் படிக்காமால் இருந்த காலம் இருந்தது உண்டு. ஆனால் இன்றைக்கு தமிழக முதல்வர் அவர்கள் பெண் கல்வி உயர வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை கொடுத்து படிக்க வைத்து கொண்டு இருக்கிறார் என கூறினார்.

அத்துடன், ஒரு காலத்தில் தமிழ் கல்லூரிகளில் இல்லை. நான் படிக்கும் போது ஆங்கிலம்
மட்டுமே இருந்தது. கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி கிடையாது. அந்த கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வந்தது திமுக தான். வாட்ச் புகழ் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வரப் போகிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள் என பேசினார்.

மேலும், நான் கடந்த முறை 2006-2008ம் ஆண்டில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோதே பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வந்து
விட்டோம் என்றும், எஞ்சினேயரிங் கல்லூரிகளில் தமிழ் பொழிப்பாடம் கிடையாது.
இந்த வருடம் தான் முதல் செமஸ்டரில் தமிழர் பண்பாடு, இரண்டாம் செமஸ்டரில்
தமிழர் மற்றும் தொழில் நுட்பம் என 2 பாடங்களை படித்து ஆக வேண்டும் என்று
சொன்னது தமிழக அரசு. பாஜாக தமிழை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை,
மதவெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்கலாம் என்று நினைப்பவர்கள்
பாஜாகவினர் என பாஜக மீது சரமாக குற்றச்சாட்டு முன்வைத்தார் என கூரினார்.

மேலும், தாய்மொழி தமிழ் என்பது நமக்கு கட்டாயம். தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தால் போதும் என்று இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தாய்மொழியில் படிக்க வேண்டும் வெளிநாட்டில் உள்ளவர்களிடத்தில் பழகுவதற்கு ஆங்கிலம் வேண்டும். இந்த 2 மொழிகள் இருந்தால் போதும். கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடத்தில் கேட்கும் பொழுது இருமொழிக் கொள்கையை போதும் என்று சொல்வார்கள். ஆனால் பாஜாக நம்முடைய மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி 3 மொழியை திணிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் என கூறினார்.


அத்துடன், இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் 3ம், 5ம், 8ம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்று சொல்லி வருகின்றனர். கல்விக் கொள்கையில் ஒரு பித்தலாட்டதை செய்து வருகின்றனர் பாஜாகவினர். இன்றைக்கு அதிமுகவில் 3 அல்லது 4 குருப்பாக உள்ளனர். தினம் ஒரு குருப்பு வந்து கொண்டிருக்கிறது. சி.வி.சண்முகம் மேடை ஒன்றில் பேசும்போது உதயா என் கால் தூசிக்கு சமம் என்று பேசினார். என்னை பேசியிருந்தால் கூட பரவாயில்லை ஒரே மாவட்டத்தை சார்ந்தவர் என்று விட்டு இருப்பேன். ஆனால் உதயாவை பற்றி பேசும்போது கடும் கோபம் வந்தது. அதை சொல்வதற்கு அரசியலுக்கும் அவருக்கும் என்ன இருக்கிறது என்று பேசினார். விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் உள்ள பேனரில் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தை கிழித்துள்ளனர் என்றார்.

மேலும், இன்றைக்கு டிவியை பார்த்தால் இபிஎஸ் அல்லது ஓபிஎஸ் அல்லது சிவிஎஸ் அல்லது ஜெயக்குமாரா என்று பேசி வருகின்றனர். ஜெயக்குமார் ஒரு பெரிய ஞானி அறிவாளி போல் பேசி வருகிறார். யார் தலைமையில் யார் வருவது என்று அவர்களுக்கும் பிரச்சனை நிலவி வருகிறது. பாஜாகவின் கீழ் இவர்கள் செல்வதா அல்லது இவர்கள் கீழ் பாஜாக செல்வதா என்று தற்போது அவர்களுக்குள் சண்டையிட்டு வருகிற காலம் என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பரமக்குடி ஆட்டுச்சந்தை

Gayathri Venkatesan

ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு

Halley Karthik

இளைஞர்கள், விவசாயிகளை பயமுறுத்துவது தான் பாஜகவின் கொள்கை- ராகுல்காந்தி

Jayasheeba