அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாலர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 20 மாத கால திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் விடியலே தவிர தமிழகத்திற்கு இல்லை.சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்கள் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறார்கள். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலிலும் இணைந்து வந்தால் மிகவும் நல்லது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என கூறினார்.
அத்துடன், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இல்லை.ஓ பன்னீர்செல்வம் சசிகலா டிடிவி தினகரன் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.அதிமுக தலைமை கூட்டணியில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஓபிஎஸ் அளித்துள்ள வக்கீல் நோட்டீஸ் எந்த வகையிலும் எடுபடப் போவதில்லை.ஆனால் எந்த தாக்கமும் இருக்காது என தெரிவித்தார்.
மேலும், ஆதி திராவிடர் மக்களை வஞ்சிக்கின்ற செயலாக தான் மாணவர் விடுதிகளுக்கு முறையான செலவினங்கள் செய்யப்படாமல் இருக்கிறது.மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட எவருக்கும் இதுவரை அரசு நிவாரணம் அளிக்க வில்லை.அதிமுகவில் உணர்வு மூலமாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ஒரு லட்சம் கிளை கழகங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இதை சரியான நேரமில்லை. தொகுதி பங்கீடுகள் அனைத்தும் அதிமுக தலைமை முடிவு செய்வது தான் எனவும் அவர் பேசினார்.