அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கிப் பேசினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாங்கள் கேட்பது தமிழ் தேசியதிற்கான போராட்டம் அல்ல; உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை போராட்டத்திற்கான முன்னெடுப்பு.
75% தமிழ்நாட்டு வரி தமிழருக்கு 25% பொது நிதி என்பதே சீமானின் நிலை. பொது வரிக்கான கணக்கு கட்டாயம் காட்ட வேண்டும்.
எல்லா உரிமையையும் இழந்துவிட்டு அடிமையாக வாழ நாங்கள் தயாராக இல்லை. சுதந்திரத்திற்காக பல போராட்டங்களை தமிழர்கள் கண்டுள்ளனர். இதை செய்யாமல் ஆர்எஸ்எஸ்காரர்கள் ஆட்சி செய்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்திற்காக செய்தது என்ன என்பது குறித்து சொல்ல வேண்டும். இந்திய நாடு இரண்டாக பிரிக்கும் நிலை விரைவில் உருவாகும். திராவிட நாடு என இவர்கள் சொல்வதற்கு பதில் தென் இந்தியா என சொல்லிருக்கலாம்.
தமிழினுக்கு வேதமாக திருக்குறள் தான் என்ற சட்டம் நான் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வரப்படும். அனைத்து சட்டங்களையும் பாராளுமன்ற விவாதம் செய்து கொண்டுவருவதல்ல. அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது.
வெள்ளைக்கார ராணிகள் வரும்போது குச்சி வைத்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். காஷ்மீர் இஸ்லாமியர்களை இந்திய நாட்டில் சேர சொல்பவர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களை வெளிநாட்டிற்கு செல்ல சொல்கிறார்கள்.
அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர். அறிவை வளர்க்கும் கல்வி, உயிரை காக்கும் மருத்துவம் கூட அரசிடம் இல்லை. சூரிய ஒளி மின்சாரத்தை தனியாரிடம் கொடுத்தால் பிற்காலத்தில் மின்சார விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
நாம் தமிழர் கட்சியினர் வீட்டிலேயே மின்சாரம் தயாரிக்கும் முறையை செய்து வருகிறது. அதானி அம்பானி கட்டும் வரியை போல தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு செல்பவரும் கட்டுகிறார்கள். எல்லோருக்குமான அரசு என்பது இல்லை.
மக்களுக்கான அரசு உருவாக வேண்டும் அது நாம் தமிழர்கட்சியின் அரசாக இருக்கும். திரவிட மாடல் என்ற பழைய மாடலை எடுத்து சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
10 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகனுக்கு முடி சூட்ட காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன் மனைவிகூட சேர்ந்திருக்க மாட்டார்கள்.
செய் அல்லது செத்து மடி என்பது பழசு. செய் அல்லது சாகடி என்பது எங்கள் கோட்பாடு என்றார் சீமான்.