விரைவில் உதயநிதியுடன் இணைந்து படத்தில் நடிப்பேன்-நடிகர் விஷால்

விஷால் நடிப்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் உருவான திரைப்படம் லத்தி சார்ஜ். நடிகர் விஷால் முருகானந்தம் என்ற போலீசாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் எச்.வினோத்குமார் இயக்கி உள்ளார். விஷாலின் முதல்…

விஷால் நடிப்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் உருவான திரைப்படம் லத்தி சார்ஜ்.

நடிகர் விஷால் முருகானந்தம் என்ற போலீசாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் எச்.வினோத்குமார் இயக்கி உள்ளார். விஷாலின் முதல் பான் இந்தியா படம்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஷாலின் தாய் பெயரில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 5 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி கற்க ராணா தயாரிப்பு நிறுவனம் சார்பில் உதவி தொகை வழங்கப்பட்டது.

இதில் பேசிய விஷால், “பொக்கே, சால்வை கொடுப்பதை தவிர்க்க வலியுறுத்துகிறோம். நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர் இடம் பெற வேண்டும் என்பது எனது ஆசை. அது விரைவில் நடைபெற உள்ளது. விரைவில் உதயநிதி உடன் ஒரு படம் பண்ணுவேன்”  என்றார்.

உதயநிதி கூறுகையில், “நானும் விஷாலும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டியது. ஆனால் நல்ல கதை அமையவில்லை. நானும் விஷாலும் சேர்ந்து பள்ளிக்குச் சென்றோம். நானும் விஷாலும் சேர்ந்து கல்லூரிக்கு சென்றோம். அவ்வளவு தான் சொல்ல முடியும். லத்தி படத்தின் படப்பிடிப்பில் நிறைய அடிப்பட்டதாக சொன்னார்கள். என்னுடைய நண்பனிடம் ஏன் விஷால் இப்படி பண்றான் என்று கேட்பேன் என்றார் உதயநிதி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.