முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் தனித்துவிடப்படுவார் – சி.வி.சண்முகம் விமர்சனம்

அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் இறுதியில் தனித்துவிடப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுகஅலுவலகத்தில் அக்கட்சி தொடங்கப்பட்டு 51வது ஆண்டினை
சிறப்பாக கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களைவை உறுப்பினர் சி.வி.சண்முகம், திமுகவுடன் நேரடியாக உறவு வைத்து கொண்டு, அதிமுக கரை வேட்டியை கட்டி கொண்டு தான் அதிமுக என ஓ.பன்னீர் செல்வம் கூறி கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் அதிமுகவை எதிர்த்து நிற்பவர்களும், அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் எல்லோரும் தனித்துவிடப்படுவார்கள் என்றும் விமர்சித்தார். ஓ.பன்னீர்செல்வத்தோடு இருப்பவர்களை நிழல் கூட நம்பாது என்றும் சாடினார்.

நாடாளுமன்ற தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 16 மாதங்களில் மக்களிடம் மிக பெரிய எதிர்பினை பெற்ற அரசாக, திமுக அரசு மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியை எப்போது தூக்கி எறியலாம் என மக்கள் தயாராக இருப்பதாகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யும் அராஜகங்களை மக்களிடத்தில் எடுத்துரைத்து, வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மிக பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாம் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்கிறோம் – நடிகை ஸ்ருதிஹாசன்

EZHILARASAN D

கோடை வெப்பம் – பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

EZHILARASAN D

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தாக்கும் புதிய வைரஸ்!

EZHILARASAN D