“மாணவர்களைத் தாக்கியவர்களைத் தண்டிக்க வேண்டும்” – ராகுல் காந்தி வலியுறுத்தல்!

மாணவர்களை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடந்து வரும் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான தீர்மானம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கி, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடரபாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மாணவர்களை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக் கூடாது, மாணவர்களின் கோரிக்கை மத்திய அமைச்சரின் பதவி நீக்கமே எனவும் மாணவர்களைத் தாக்கியவர்களைத் தண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.