தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அக். 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் – செப். 9

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் – செப். 17

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் – செப். 19

வாக்கு எண்ணிக்கை – அக். 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீதியுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

மேலும், புதுச்சேரி மாநிலம் தட்டஞ்சாவடி தொகுதிக்கும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் ரெஜி நகர் மற்றும் நந்திகிராம் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலம் நாகான் தொகுதிக்கும் அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.