மீலாது நபி பெருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரபல பள்ளிவாசலான ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் திரளான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்கள் மண்ணில் அவதரித்த திருநாளை உலகெங்கும் இஸ்லாமியர்கள் மீலாது நபி பெருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி தூத்துக்குடியில் உள்ள பிரபல பள்ளிவாசலான ஜாமியா பள்ளிவாசலில் கடந்த 12 நாட்களாக சிறப்பு துவா ஓதப்பட்டது. இன்று காலையில் மிலாது நபியை முன்னிட்டு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு துவா ஓதப்பட்டது.
பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
வேந்தன்







