தூத்துக்குடி அருகே அரிய வகை பவளப்பாம்பு கண்டெடுப்பு!

விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை “நாணல் குச்சி பவளப்பாம்பு” பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், மிகச் சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு…

விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை “நாணல் குச்சி பவளப்பாம்பு” பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில்,
மிகச் சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு ஒன்று சாலையை கடக்க
முயன்றது. அப்போது வித்தியாசமாக காணப்பட்ட இந்த அரிய வகை பாம்பை  அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல இயற்கை ஆர்வலர்கள்  பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இந்த பாம்பை இனம் காண உயிரின ஆய்வு செய்யப்பட்டது. அதில், இது இந்தியாவிலேயே மிக அரியவகை பாம்பான “நாணல் குச்சி பவளப்பாம்பு” என்றும், இதன் மொத்த வளர்ச்சியே இவ்வளவு தான் என்றும் தெரிவித்தனர். மேலும், மிகச் சிறிய அளவில் மில்லிய உடல் அமைப்பு கொண்ட இந்த நாணல் குச்சி பவள பாம்பு, நல்ல பாம்பு கொண்டுள்ள அதே அளவு கொடூர விசத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தனர்.

இது எண்ணிக்கை அடிப்படையில் மிகக் குறைவாக உள்ள பாம்பு வகையை சேர்ந்ததாகவும், அதிக ஈரப்பதமான பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை என்றும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த “நாணல் குச்சி பவளப்பாம்பை” வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.