தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது
துப்பாக்கி சுட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு தூத்துக்குடி கலைஞர்
அரங்கத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மலர் தூவி
மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மேயர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்பி தெரிவித்ததாவது..
எந்த உரிமைக்காக அவர்கள் போராடினார்களோ அதற்காக இம்மக்களோடு நிற்கும் உறுதியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் ஆட்சி பொறுப்பை ஏற்ற சில தினங்களிலேயே துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து இந்த மக்களுக்காக போராடி வருகிறது. நீதிமன்றத்திலும் இவர்களோடு துணை நிற்கிறது. மக்களின் போராட்டத்திற்கு விரைவிலே ஒரு வெற்றி கிடைக்கும்” என கனிமொழி எம்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







