ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதுm ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஈரான் நிபந்தனைகளின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
“நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. அதன்பிறகு, ஒரு சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாங்களும் எங்களின் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் ஈரானை அழிவின் விளிமில் இருந்து மீட்க அயராது பாடுபடுவோம்.
ஈரானை பொருளாதார ரீதியாக முன்பை விட சிறந்ததாகவும், வலிமையாகவும் மாற்றுவோம். ஈரானை மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள் ”
எனத் தெரிவித்துள்ளார்.







