சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1.280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 960-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 680-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







