ஜூலை 10 ஆம் தேதி ரீ-ரிலீசாகும் ‘ரன்’….!

நடிகர் மாதவனின் ரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமி நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரன்’. நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன், அதுல் குல்கர்ணி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

சாக்லேட் பாயாக இருந்து வந்த மாதவனுக்கு ரன் திரைப்படம் ஆக்சன் ஹீரோ இமேஜை கொடுத்தது. அதிலும் அந்த ஷட்டர்சீன் தமிழ் சினிமாவின் கிளாசிக் சண்டைக்காட்சியாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ரகுவரனுடனான அவரது சின்களும் சூப்பர்

மாதவனை நம்பி சென்னைக்கு வந்து மாட்டி தவிக்கும் நடிகர் விவேக்கின் காமெடி டிராக் தனி ரசிகர்கள் உண்டு. வித்யாசாகர் இசையமைத்திருந்த இப்படத்தின் வாடா மச்சா வயசுக்கு வந்திட்ட, காதல் பிசாசே, இச்சுதா இச்சுதா உள்ளிட்ட பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் ரன் திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி ரீ-ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.