வெற்றிக்கு காரணமான மந்திரம் இதுதான்…: ரசிகரின் கேள்விக்கு நடிகர் நானி பதில்!

உங்களின் வெற்றிக்கான மந்திரம் என்ன? என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகர் நானி பதிலளித்துள்ளார். தமிழில் வெப்பம்,  ஆஹா கல்யாணம்,  நான் ஈ படங்களின் மூலம் பிரபலமானவர் நானி. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி,  கேங் லீடர், …

உங்களின் வெற்றிக்கான மந்திரம் என்ன? என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகர் நானி பதிலளித்துள்ளார்.

தமிழில் வெப்பம்,  ஆஹா கல்யாணம்,  நான் ஈ படங்களின் மூலம் பிரபலமானவர் நானி. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி,  கேங் லீடர்,  சியாம் சிங்கா ராய்,  அடடே சுந்தரா,  தசாரா ஆகிய படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  நானியின் 30-வது படத்தினை அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘ஹாய் நான்னா’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது.  வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நானியின் படங்களுக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.  படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  டிச.7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

நடிகர் நானியுடனான கேள்வி பதில்கள் நேரத்தில் ‘உங்களின் வெற்றிக்கான மந்திரம் என்ன? தயவு செய்து சொல்லுங்கள்,  நானும் அதை என்னுடைய களத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன்” என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.  அதற்கு நடிகர் நானி, “எந்த மந்திரங்களையும் எதிர்பார்ப்பதில்லை என்பது தான் என்னுடைய மந்திரம்” எனப் பதிலளித்துள்ளார்.

மேலும், இன்னொருவர் கேட்ட கேள்விக்கு பிரபலமான மீம்ஸில் வரும் இதுதண்டா சினிமா
டெம்பிளேட்டினையும் பதிலளித்துள்ளார்.  உங்கள் படத்தின் க்ளைமேக்ஸ் பார்த்துவிட்டு
பார்வையாளர்களின் மனநிலை எப்படி இருக்குமென கேட்டதுக்கு இப்படி நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.  இதன்மூலம் சமூக வலைதளத்தினை நடிகர் நானி, உன்னிப்பாக கவனிப்பவராக இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.